சினிமாவில் “ஆண்களின் ஆதிக்கம் அதிகம்”சமூகத்தில் பெரும்பாலான துறைகளில் குறிப்பாக சினிமாத் துறையில் ஆண்களின் ஆதிக்கம் அதிகளவில் இருப்பதாக திரைப்பட இயக்குனர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மும்பை பெண்கள் சர்வதேச திரைப்பட விழா தொடர்பாக இன்று செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார். 
சினிமாவில் நடிகர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம், கதாபாத்திரம், மரியாதை ஆகியனவற்றை நடிகைகளுக்கு தருவதில்லை. கூலித் தொழிலாளிகளுக்கு ஊதியம் வழங்குவதில் பாகுபாடு காட்டுப்பட்டு வந்தது. அதற்கு ஆண்கள் உடல் ரீதியாக அதிக பலம் பொருந்தியவர்கள் என்ற சப்பை கட்டும் கூறப்பட்டு வந்தது ஆனால் முழுக்க முழுக்க திறமை சார்ந்தது. ஆனால் இங்கும் ஏன் இந்தப் பாகுபாடு காட்டப்படுகிறது என்ற வாதத்தை முன் வைத்தார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.
இயக்குநர் நந்தினி பேசுகையில் சிறு வயதிலிருந்தே ஆண் குழந்தைகளுக்கு பெண்களை மதிக்க வேண்டும், அவர்களை அடிக்கவோ துன்புறுத்தவோ கூடாது என்ற படிப்பினையை செய்ய வேண்டும் என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில், திரைப்பட நடிகை விஜி சந்திரசேகர், இயக்குனர் நந்தினி, குட்டி பத்மினி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.


யாரென்று புரிகிறதா..இவன் தீ என்று தெரிகிறதா விஸ்வரூபம்:கமல்ஹாசன்

   விஸ்வரூபம் படத்தை டி.டி.எச்.,சில் வெளியிடுவதால் யாருக்கும் பாதிப்பில்லை என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
விஸ்வரூபம் படத்தை கமல்ஹாசன் டி.டி.எச்., சில் வெளியிடுவதற்கு தமிழக திரையுலகத்தில் பரவலாக எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து நேற்று முதல் திரையரங்கு உரிமையாளர்களுடன் நடிகர் கமல்ஹாசன் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தார்.
புது வழி ..பொது வழியாகும் :இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் விஸ்வரூபம் சர்ச்சை குறித்து விளக்கமளித்த கமல்ஹாசன் : டி.டி.எச்.,சில் திரைப்படத்தை வெளியடுவது என் புதிய வழி என்றார். நியாமான முறையில் நான் வியாபாரம் செய்துள்ளேன் இதனால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்றார். எதிர்காலத்தில் டி.டி.எச்.,சில் திரைப்படங்களை வெளியிடுவது பொதுவழியாகும். மாற்றத்தை ஏற்றுக் கொள்ளும் மனம் வேண்டும் என்றார்.
விஸ்வரூபம் திரைப்படத்தின் அறிமுகப் பாடலில் இடம் பெற்றுள்ள யாரென்று புரிகிறதா?..இவன் தீ என்று தெிரிகிறதா என்ற வரியை மேற்கோள் காட்டி பேசிய கமல்ஹாசன் : தானும் வாழ்க்கையில் தடைகளை எதிர்த்து முறியடித்து வெற்றிகளை காணும் லட்சியம் உள்ளவன் என சுட்டிக் காட்டினார்.
மேலும் நேர்மையாக தொழில் நடத்தும் தனக்கு யாரும் மிரட்டல் விடக்கூடாது என்றார். ஒரே நாளில் 2முறையிலும் விஸ்வரூபம் திரைப்படம் வெளியிடது குறித்து ஆலோசனை நடத்தப்படும், நியாமான கருத்துக்கள் முன்வைக்கப்படும் நிலையில் ஒரே நாளில் 2 முறையில் திரைப்படம் வெளியிடப்படும் என்றும் கமல்ஹாசன் உறுதிபட தெரிவித்தார். ரிலீஸ் தேதி தற்போதைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ரிலீஸூக்கான தேதி குறித்து பலருடன் ஆலோசிக்க வேண்டியிருக்கிறது. ஆலோசனைகள் முடிந்த பின்னர் நானே ரிலீஸ் தேதியை அறிவிப்பேன்.
சட்டவிரோத ஒளிபரப்புக்கு தக்க நடவடிக்கை : விஸ்வரூபம் படத்தை ஓட்டல், ஷாப்பிங் மால் போன்ற பொது இடங்களில் டி.டி.எச்.,சில் ஒளிபரப்புவது சட்ட விரோதமானது. அவ்வாறு ஒளிபரப்பப்பட்டால் சட்ட ரீதியாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
பணம் வாபஸ் குறித்து விளக்கம்: டி.டி.எச்.,சில் விஸ்வரூபம் படத்தைக் காண பலர் பணம் கட்டியிருந்த நிலையில், ரிலீஸ்  தள்ளிப்போகும் பட்சத்தில் பணம் திரும்பத் தரப்படுமா என்ற கேள்வி கமலிடம் எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த கமல் படத்தை பார்க்க பணம் கட்டியவர்கள் பணம் வாபஸ் பெற விரும்பினாலும் தரப்படும், இல்லை படம் ரிலீஸ் ஆகும் தேதியில் பார்த்துக் கொள்ளலாம் என முடிவு செய்தால், பணத்தை திரும்பப்பெறாமல் பார்த்துக் கொள்ளலாம் என்றார்.
.-பசுமை நாயகன்

கோச்சடையான்